பட்டாசு வெடிப்பதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் மீது: பட்டாசு தகராறு: ஆட்டோ ஓட்டுநர் மீது
பட்டாசு வெடிப்பதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் மீது: பட்டாசு தகராறு: ஆட்டோ ஓட்டுநர் மீது
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 10:56 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 27. ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் தீபாவளியன்று இரவு செங்கல்பட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தென்பாதி விநாயகர் கோவில் அருகில் ஆட்டோவில் வந்த போது அங்கு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாசு வெடிக்கும் போது ஏன் இங்கு வந்தாய் என கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரஞ்சித் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவே புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று மாலை ரஞ்சித் வீட்டின் இருந்த போது 10க்கும் மேற்பட்ட கும்பலினர், ரஞ்சிதை தாக்கி வெட்ட துரத்தி சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
ரஞ்சித் அருகில் இருந்த வீட்டில் புகுந்து கதவை பூட்டி தப்பினார். ரஞ்சிதை காப்பாற்ற அவரின் அண்ணன் தமிழ்ச்செல்வன், 29, .சென்ற போது அந்த கும்பல் அவரை தலையில் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
