/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புயலுக்குப் பின் மீன்வளம் அதிகரிப்பால் மீனவர்கள் 'குஷி'
/
புயலுக்குப் பின் மீன்வளம் அதிகரிப்பால் மீனவர்கள் 'குஷி'
புயலுக்குப் பின் மீன்வளம் அதிகரிப்பால் மீனவர்கள் 'குஷி'
புயலுக்குப் பின் மீன்வளம் அதிகரிப்பால் மீனவர்கள் 'குஷி'
ADDED : டிச 05, 2024 11:12 PM

புதுப்பட்டினம், வங்கக் கடலில் புயல் உருவாகி கரையைக் கடந்த நிலையில், மீன்வளம் பெருகியுள்ளதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிக்குப்பம் முதல் இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, மீனவர்கள் வசிக்கின்றனர். வாழ்வாதாரத் தொழிலாக கடலில் மீன் பிடித்து விற்பனை செய்கின்றனர்.
அண்மைக் காலமாக, கடலில் மீன்வளம் குறைந்து வருமானம் குறைவதாக, மீனவர்கள் கவலையில் இருந்தனர். ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகும், வாழ்வாதார வருவாய் ஈட்டும் வகையில், மீன்வளம் இல்லையென கவலையடைந்தனர்.
இச்சூழலில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, கடலில் மீன்வளம் பெருகி உள்ளதாக, மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, வாயலுார் உய்யாலிகுப்பம் மீனவர்கள் கூறியதாவது:
கடலில் சில மாதங்களாக மீன் குறைவாகவே கிடைத்தது. ஒரு படகில் பலர் மீன் பிடிக்கச் செல்கின்றனர். மீன்கள் சரியாக கிடைக்காததால், போதிய வருவாய் கிடைக்கவில்லை. இப்போது ஏற்பட்ட புயல், கடலை புரட்டிப் போட்டது.
கனமழையால் பாலாற்று வெள்ளமும் கடலில் சேர்ந்துள்ளது. இதனால் கானாங்கெளுத்தி, பாறை மீன்கள், நண்டு உள்ளிட்டவை, கரையோரமே அதிகமாகக் கிடைக்கின்றன. எங்களுக்கும், உழைப்பிற்கேற்ற வருவாய் கிடைக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.