/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் உட்பட ஐந்து பேர் கைது
/
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் உட்பட ஐந்து பேர் கைது
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் உட்பட ஐந்து பேர் கைது
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் உட்பட ஐந்து பேர் கைது
ADDED : ஜன 30, 2024 11:21 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவி பகவதியின் கணவர் நாகராஜன், தன்னை மிரட்டுவதாகக் கூறி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், லட்சுமணன் வினோத்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதில், அவர் கூறியிருந்ததாவது:
கன்னிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறேன். மேலும், கன்னிவாக்கம் கிராமத்தில் 'லேண்ட் டெவலப்' செய்யும் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறேன்.
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் நாகராஜன் என்பவர், தங்களது கிராமத்தில் உள்ள சாலைக்கு மண் வேண்டும் எனக்கேட்டு மூன்று லோடு லாரி மண்ணை பெற்றார்.
ஆனால், அதை அவர் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அதன்பின், மீண்டும் 25 லோடு மண் வேண்டும் என்றும், அதை கொடுக்கவில்லை என்றால் வேலை செய்ய விடமாட்டேன் என்றும் மிரட்டுகிறார்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதன்படி, நாகராஜன், 48, அவரது ஆதரவாளர்களான வினோத்குமார், 34, லோகநாதன், 45, பிரதீப்குமார், 45, சிட்டிபாபு, 54, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஊராட்சி தலைவியின் கணவர் கைதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பிரச்னையில் ஈடுபடலாம் எனக் கருதி, 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.