/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ம.தி.மு.க., சார்பில் திருப்போரூரில் அன்னதானம்
/
ம.தி.மு.க., சார்பில் திருப்போரூரில் அன்னதானம்
ADDED : நவ 06, 2025 11:52 PM

திருப்போரூர்:திருப்போரூரில் ம.தி.மு.க., சார்பில், மது ஒழிப்பு போராளியும், கட்சி தலைவர் வைகோவின் தாயாருமான மாரியம்மாளின் 10 ஆண்டு நினைவு நாளான நேற்று, அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே ம.தி.மு.க., சார்பில், மது ஒழிப்பு போராளியும், ம.தி.மு.க., தலைவர் வைகோவின் தாயாருமான மாரியம்மாளின் 10ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு, நடந்தது.
இதில் , செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் லோகநாதன் தலைமையில், மாரியம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் ஏழை, எளிய மக்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ம.தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

