/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
34 சென்ட் நிலம் மோசடியாக பதிவு மாஜி வங்கி அதிகாரிக்கு 'காப்பு'
/
34 சென்ட் நிலம் மோசடியாக பதிவு மாஜி வங்கி அதிகாரிக்கு 'காப்பு'
34 சென்ட் நிலம் மோசடியாக பதிவு மாஜி வங்கி அதிகாரிக்கு 'காப்பு'
34 சென்ட் நிலம் மோசடியாக பதிவு மாஜி வங்கி அதிகாரிக்கு 'காப்பு'
ADDED : ஜன 11, 2025 07:52 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் மேட்டுத் தெருவில் வசிப்பவர் கோவிந்தராஜன், 65.
இவர் நேற்று முன்தினம், தாம்பரம் போலீஸ் கமிஷனரை சந்தித்து, புகார் மனு ஒன்றை வழங்கினார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
வண்டலுார் வட்டம், காரணை புதுச்சேரி கிராமம் சர்வே எண் 140/2ல் உள்ள, 34 சென்ட் குடும்ப சொத்தின் உயில் பத்திரத்தில், என் சகோதரர் கமலக்கண்ணன், 64, என்பவர் மோசடியாக திருத்தம் செய்து, அவரது மனைவி பெயரில் பத்திர பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு, என் தாய் அண்ணபூரனி புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்தாண்டு செப்டம்பரில், என் தாயார் இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து, கமலக்கண்ணன் மற்றும் அவரது மனைவி கோமளவள்ளி ஆகியோர், நாங்கள் அளித்த புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முயற்சிக்க கூடாது எனவும், மீறினால் என்னையும், என் குடும்பத்தாரையும் ஒழித்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர். சொத்தை அபகரித்துள்ள கமலக்கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் கமிஷனர் இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கூடுவாஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இரு தரப்பினரையும் நேரில் அழைத்து போலீசார் விசாரித்தனர். இதில், கமலக்கண்ணன் போலியான ஆவணங்கள் தயாரித்து, இடத்தை அபகரித்து உள்ளது தெரிந்தது. இதையடுத்து, கமலக்கண்ணனை போலீசார் நேற்று கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.
கமலக்கண்ணன் கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

