/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மாஜி' ஊராட்சி தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
'மாஜி' ஊராட்சி தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 28, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முடிச்சூர், முடிச்சூர் ஊராட்சி முன்னாள் தலைவர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் தி.மு.க.,வில் இணைந்தனர்.
தாம்பரம் சட்டசபை தொகுதியில் அடங்கியது, முடிச்சூர் ஊராட்சி. இவ்வூராட்சியில், கடந்த 1996 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் வார்டு உறுப்பினராகவும், 2006 முதல் 2016 வரை ஊராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர் தாமோதரன்.
இவர், தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா முன்னிலையில், நேற்று முன்தினம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன், அவர் தி.மு.க.,வில் இணைந்தார்.