/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரான்ஸ் பயணி கீழே விழுந்து காயம்
/
பிரான்ஸ் பயணி கீழே விழுந்து காயம்
ADDED : மார் 17, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்,:பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சில பயணியர்,நேற்று முன்தினம் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.
அர்ஜூனன் தபசு சிற்பம் அருகில், கணேச ரதம், வராக குடவரை இடையே நடந்து சென்றபோது, 70 வயது ஆண் பயணி, திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.
அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. அவரை வழிகாட்டிகள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைப் பெற்ற பின் புதுச்சேரிக்கு திரும்பிச் சென்று விட்டார்.

