/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி கட்டடங்கள் கட்ட மண் பரிசோதனைக்கு நிதி
/
பள்ளி கட்டடங்கள் கட்ட மண் பரிசோதனைக்கு நிதி
ADDED : ஏப் 10, 2025 08:09 PM
செங்கல்பட்டு:காட்டங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, மூன்று தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட, மண் பரிசோதனை செய்ததற்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நிதி வழங்கியது.
காட்டங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாபுரம், காரணைப்புதுச்சேரி, கீரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளிடம், கிராமவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, மேற்கண்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நபார்டு நிதியுதவி திட்டம் 2024-25ம் ஆண்டின் கீழ், புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
இதனால், பள்ளிகள் கட்டப்பட உள்ள இடங்களில், மண் பரிசோதனை செய்ததற்காக, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 5 லட்சத்து 31 ரூபாய், மண் பரிசோதனை செய்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கு, ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

