/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை பஸ் நிலையம் பராமரிக்க நிதி
/
செங்கை பஸ் நிலையம் பராமரிக்க நிதி
ADDED : டிச 07, 2024 12:51 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ளன.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம்,தாம்பரம், உத்திரமேரூர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து நிலைய கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் விபத்து அச்சம் நிலவியது. இதையடுத்து, பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது.
இதைத்தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணி, வண்ணம் பூசுதல் பணிகள் செய்ய, 10 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்து, நகர மன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
இப்பணிகளை செயல்படுத்த, நகர மன்றம் அனுமதி வழங்கியது. பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் விரைவில் துவங்கப்படும் என, பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.