/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குரோம்பேட்டையில் விநாயகர் கண்காட்சி
/
குரோம்பேட்டையில் விநாயகர் கண்காட்சி
ADDED : ஆக 28, 2025 01:23 AM
தாம்பரம்:குரோம்பேட்டையில், விநாயகர் கண்காட்சி துவங்கியது.
குரோம்பேட்டையை சேர்ந்த கட்டட கலை நிபுணர் சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர், கடந்த 18 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன், இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குரோம்பேட்டை, அனுமன் கோவில் தெருவில், ராம கணேஷ் காம்ப்ளக்ஸில், 22,000 விநாயகர் சிலைகளுடன் கூடிய, 19ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி நடத்தினார். இதை, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சி, செப்., 7ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடைபெறும்.