தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கிடங்கில் குப்பை தேங்குவதால் கொளத்துாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு

கிடங்கில் குப்பை தேங்குவதால் கொளத்துாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு

கிடங்கில் குப்பை தேங்குவதால் கொளத்துாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கபெருமாள் கோவில்:

கொளத்துாரில் ‘பயோமைனிங்’ எனும் தரம் பிரிக்கப்பட்ட குப்பை, கிடங்கில் தேங்குவதால் மழை காலங்களில் நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் 520 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.இந்த குப்பை அனைத்தும் ‘டாரஸ்’ லாரிகள் வாயிலாக கொளத்துார் ஊராட்சியில், சிங்க பெருமாள் கோவில் – - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம் உள்ள 44 ஏக்கர் அரசு மேயக்கால் புறம்போக்கு நிலத்தில், 2019ம் ஆண்டு முதல் கொட்டப்பட்டு வருகிறது.

காட்டாங்கொளத்துார், புனித தோமையார் மலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகள் மற்றும் செங்கல்பட்டு, பூந்தமல்லி, குன்றத்துார் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளும் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. தினமும், 120 ‘டாரஸ்’ லாரிகளில் குப்பை கொண்டு வரப்படுகின்றன.

கடந்த எட்டு ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுவதால், மலை போல் குவிந்துள்ளது. இந்த குப்பை குவியல்களை அகற்ற தாம்பரம் மாநகராட்சி நகர்ப்புற துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 35 கோடி ரூபாய், 2024ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அதன் படி, ‘பயோ மைனிங்' முறையில் குப்பையை பிரித்து, அரைத்து அப்புறப்படுத்தும் பணிகளுக்கு தனியார் நிறுவனத்திற்க்கு கடந்தாண்டு ‘டெண்டர்’ விடப்பட்டது. தற்போது குப்பையை அரைத்து தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் பழைய துணி, கண்ணாடி துகள்கள், பிளாஸ்டிக் மற்றும் இயற்கை உரம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகின்றன.

குப்பையை தரம் பிரித்து பிளாஸ்டிக் குப்பை திருச்சி டால்மியாபுரம் பகுதியில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

ஜூன் மாதம் வரை குப்பை கிடங்கில் மொத்தம் 4.92 லட்சம் கனமீட்டரில் குப்பை அகற்றப்பட்டு உள்ளதாக தாம்பரம மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு 1.68 கோடி ரூபாய் மாநகராட்சி செலவு செய்துள்ளது.

பொது மக்கள் கூறியதாவது:

கொளத்துாரில் உள்ள குப்பை கிடங்கால் அதை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, கிடங்கில் தேங்கியுள்ள அனைத்து வித குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us