/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு நிலத்தில் கொட்டி எரிக்கப்படும் குப்பை
/
அரசு நிலத்தில் கொட்டி எரிக்கப்படும் குப்பை
ADDED : பிப் 13, 2024 04:00 AM

மறைமலை நகர், : காட்டாங்கொளத்துார், ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு உள்ள மலையின் பின்புறம் உள்ள காலியிடம், அரசு புறம்போக்கு இடம், ஏரிக்கரை அருகில் உள்ள குப்பை கொட்டும் இடம், பெரும்புதுார் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடம் என, பல இடங்களில் குப்பை கொட்டி எரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, அதிக அளவில் வெளி ஊர்களில் இருந்து வந்து நுங்கு விற்பனை செய்வோர், இந்த பகுதியில் இரவு நேரங்களில் அந்த குப்பையை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இரவு நேரங்களில் குப்பைக்கு தீ வைப்பதால், பனிப்பொழிவு காரணமாக,, சில நேரங்களில் சுவாச பிரச்னை ஏற்படுகிறது.
மேலும், அருகில் காப்பு காடுகள் உள்ளதால், குப்பை எரியும் போது, காடுகளில் உள்ள மரங்களும் தீப்பற்றி எரிய அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு, குப்பை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.