/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலம்பத்தில் காஞ்சிக்கு தங்கம்
/
சிலம்பத்தில் காஞ்சிக்கு தங்கம்
ADDED : நவ 12, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் துவக்கப்பட்ட, வெட்ரான்ஸ் இந்தியா சார்பில், மாநில அளவிலான முதலாவது சிலம்ப போட்டி, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 5 - 20 வயதிற்கு உட்பட்ட, பள்ளி, கல்லுாரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் அணி தங்கப்பதக்கமும், புதுக்கோட்டை வெள்ளிப்பதக்கமும், தர்மபுரி வெண்கலப் பதக்கமும் வென்றன.
பதக்கம் வென்ற வீரர்கள், 2025ல் நடைபெறும் தென் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்பர் என, காஞ்சிபுரம் மாவட்ட வெட்ரான்ஸ் இந்தியா விளையாட்டு பிரிவு மாவட்ட செயலர் பாலா தெரிவித்தார்.