/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார்களை ரயிலில் கொண்டு செல்ல சிங்கப்பெருமாள் கோவிலில் 'குட்ஸ் ஷெட்'
/
கார்களை ரயிலில் கொண்டு செல்ல சிங்கப்பெருமாள் கோவிலில் 'குட்ஸ் ஷெட்'
கார்களை ரயிலில் கொண்டு செல்ல சிங்கப்பெருமாள் கோவிலில் 'குட்ஸ் ஷெட்'
கார்களை ரயிலில் கொண்டு செல்ல சிங்கப்பெருமாள் கோவிலில் 'குட்ஸ் ஷெட்'
ADDED : ஆக 29, 2025 11:57 PM
சென்னை, கார்களை ரயிலில் கொண்டு செல்ல வசதியாக, சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் ஆட்டோமொபைல் 'குட்ஸ் ஷெட்' அமைக்கப்பற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், ரயில்வேயில் முக்கிய நகரங்கள், துறைமுகங்களுக்கு ரயில் இணைப்பு வசதி, சரக்குகளை கையாளுவதை அதிகரிக்க நவீன 'ஷெட்டுகள்' அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை ரயில் கோட்டத்தில் மூன்றாவது ஆட்டோமொபைல் 'குட்ஸ் ஷெட்' அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் பயணியர் கட்டண உயர்வு இன்றி மாற்று வழிகளில் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விட்டு, வருவாயை அதிகரிப்பு, விரைவு ரயில்கள், ரயில் நிலையங்களில் விளம்பரங்கள் செய்வது, ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கி சரக்குகளை கையாளுவது அதிகரிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை ரயில் கோட்டத்தில், ஏற்கனவே வாலாஜா ரோடு, மேல்பாக்கம் ரயில் நிலையங்களில் ஆட்டோமொபைல் குட்ஸ்களில் கார்கள், டிரக்குகள் சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கிடையே, மூன்றாவதாக சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் ஆட்டோமொபைல் 'குட்ஸ் ஷெட்' அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் நிறுவனம் தேர்வு செய்து, கார்கள் போன்ற வாகனங்களுக்கான ஷெட்டுகள் அமைப்பது, மேற்கூரை அமைப்பது, இட வசதி விரிவாக்கம், சரக்கு கொண்டு வரும் வாகனங்களுக்கான நிறுத்த வசதி, சரக்கு கையாளுவதற்கான நவீன கருவிகள் அமைப்பது, கூடுதல் இணைப்பு சாலைகள் அமைப்பது போன்ற வசதிகளை மேற்கொள்ள உள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து, இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

