/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு - தனியார் பஸ்கள் மோதல்; 10 பேருக்கு படுகாயம்
/
அரசு - தனியார் பஸ்கள் மோதல்; 10 பேருக்கு படுகாயம்
ADDED : ஜன 07, 2024 11:20 PM

வாலாஜாபாத் : காஞ்சிபுரத்தில் இருந்து, தாம்பரம் நோக்கி தடம் எண்:155, அரசு பேருந்து, நேற்று, காலை 8:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது.
கருக்குப்பேட்டை சாலை, ராணி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாமல்லபுரத்தில் இருந்து, பயணியரை ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்தது.
அப்பேருந்து, முன்னே சென்ற லாரியை கடக்க முயன்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில், இரு பேருந்துகளின் முன் பகுதி சேதம் அடைந்ததோடு, முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தன.
இந்த விபத்தில், இரு பேருந்துகளிலும் பயணித்த 10 பயணியர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.