/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட உர கொட்டகையால் அரசு பணம் வீண்
/
ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட உர கொட்டகையால் அரசு பணம் வீண்
ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட உர கொட்டகையால் அரசு பணம் வீண்
ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட உர கொட்டகையால் அரசு பணம் வீண்
ADDED : ஜன 23, 2024 04:41 AM

அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் ஒன்றியம், மோகல்வாடி ஊராட்சியில், பொன்னியம்மன் கோவில் அருகே, அச்சிறுபாக்கம் பாசன பிரிவுக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக, குப்பை தரம் பிரிக்கும் கூடம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ், பழுதுபார்த்தல் பணியும் நடைபெற்று உள்ளது.
மோகல்வாடி ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் கூடத்தில், மட்கும், மட்கா குப்பை என பிரிக்கப்பட்டு, தனித்தனி பள்ளங்களில் கொட்டப்பட்டு வந்தது.
தற்போது பெய்த பருவ மழையால், குப்பை தரம் பிரிக்கும் கூடத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், தண்ணீர் மாசு ஏற்பட்டுள்ளது. மேலும், மண் புழு உர கொட்டகை முழுதும் நீர் சூழ்ந்து உள்ளது.
ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் செய்ய அனுமதி இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, ஆக்கிரமிப்பு செய்து அரசு பணம் வீணடிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, குப்பை தரம் பிரிக்கும் கூடத்தை மாற்று இடத்தில் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

