/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கல் பள்ளியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை
/
வேடந்தாங்கல் பள்ளியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை
வேடந்தாங்கல் பள்ளியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை
வேடந்தாங்கல் பள்ளியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை
ADDED : நவ 21, 2025 03:06 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது.
வேடந்தாங்கல் ஊராட்சியில், பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு, 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகிறனர்.
இப்பள்ளியில், ஆண்டு விழா மற்றும் மாணவ - மாணவியருக்கு நடத்தப்படும் கலை திருவிழா போன்றவை நடத்த கலையரங்கம் இல்லாமல், மண் தரையில் நடத்தப்பட்டு வந்தது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கலையரங்கம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜை நேற்று, வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் முன்னிலையில், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில், பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்வில், ஒன்றிய செயலர் தம்பு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

