/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
/
கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
ADDED : செப் 28, 2024 12:56 AM

கூடுவாஞ்சேரி, செப். 28-
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை அருகே, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. பதிவாளராக வைத்தியலிங்கம் உள்ளார்.
இவர், நேற்று அலுவலகம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு சென்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை எஸ்.பி., சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
மாலை 5:00 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது. இடம் மற்றும் வீடு தொடர்பாக பதிவு செய்ய வந்தவர்களை சோதனை செய்தே வெளியே அனுப்பினர்.
ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொதுமக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்தபின், விபரங்கள் தெரிவிக்கப்படும்,” என, தெரிவித்தனர்.