/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைவினை பொருட்கள் கண்காட்சி கத்திபாரா சதுக்கத்தில் துவக்கம்
/
கைவினை பொருட்கள் கண்காட்சி கத்திபாரா சதுக்கத்தில் துவக்கம்
கைவினை பொருட்கள் கண்காட்சி கத்திபாரா சதுக்கத்தில் துவக்கம்
கைவினை பொருட்கள் கண்காட்சி கத்திபாரா சதுக்கத்தில் துவக்கம்
ADDED : ஜன 04, 2025 01:19 AM

ஆலந்துார்:தமிழக கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகமான 'பூம்புகார்' சார்பில், மாநில அளவிலான, 'காந்தி சில்க் பஜார்' என்ற கண்காட்சி, கிண்டி கத்திபாரா நகர்ப்புற சதுக்கத்தில் நேற்று துவங்கியது.
கண்காட்சியை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்து பேசியதாவது:
தினமும் ஆயிரக்கணக்கானோர் கூடுவர் என்பதால், கத்திபாரா நகர்ப்புற சதுக்கத்தில், கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
மூன்றரை ஆண்டுகளில், 134 கோடி ரூபாய் மதிப்பிலான கலைப் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. ஓராண்டில் மட்டும், 48.34 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இதில், நான்கு கோடி ரூபாய்க்கான பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கண்காட்சியில், 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பஞ்சலோக சிலைகள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. காகித கூழ், தோல், இயற்கை நார், பனை நார், தேங்காய் ஓடு உள்ளிட்டவற்றில் தயாரான பொருட்கள், சுடுமண் சிலைகள், கலைநயமிக்க நகைகள், மணி வகைகள் பேன்றவையும், சேலை, கைத்தறி துணி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சி துவக்க விழாவில், துணிநுால் மற்றும் கதர் துறை அரசு செயலர் அமுதவல்லி, தமிழக கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் அமிர்த ஜோதி, மண்டல இயக்குனர் லஷ்மன் ராவ் அத்துகுரி, ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சி, வரும் 12ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடத்தப்படும். பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.