/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கி பாதிப்பு
/
தாம்பரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கி பாதிப்பு
தாம்பரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கி பாதிப்பு
தாம்பரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கி பாதிப்பு
ADDED : ஆக 04, 2025 04:14 AM

தாம்பரம்:திடீர் மழையால் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
தாம்பரம், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், நேற்று மதியம், ஒரு மணி நேரத்திற்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், தாம்பரம் - வேளச்சேரி சாலை, தாம்பரம் - முடிச்சூர் சாலை, ஜி.எஸ்.டி., சாலைகளில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கியது. இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்குவதில் சிரமப்பட்டனர்.
தாம்பரத்தில், இந்துமிஷன் மருத்துவமனை எதிரே மேற்கு - கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதை, வெள்ளத்தில் மூழ்கியது.
கிழக்கு தாம்பரத்தில், ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி, அவ்வழியாக சென்றோரும் பாதிக்கப்பட்டனர். பம்மல், கிருஷ்ணா நகர், ஐந்தாவது குறுக்கு தெருவில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கி, துர்நாற்றம் வீசியது. மழைவிட்ட பின், வெள்ளம் தேங்கிய இடங்களில், படிப்படியாக தண்ணீர் வற்றியது. அதன்பின், போக்குவரத்து சீரானது.
அதேபோல் ஆவடி, அம்பத்துார், கொரட்டூர், அயப்பாக்கம் வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
அணுகு சாலை பள்ளத்தில் தேங்கிய
கழிவுநீரில் கார் சிக்கி விபத்து
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார், 32. கால் டாக்சி ஓட்டுநரான இவர், நேற்று மாலை, பூந்தமல்லி அடுத்த வேலப் பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, வாடிக்கையாளரை அழைக்க சென்றார். அப்போது, தவறுதலாக மருத்துவமனையை தாண்டி கழிவுநீர் சூழ்ந்து நிற்கும் அணுகு சாலையில் சென்று விட்டார்.
பின், சுதாரித்து, அணுகு சாலையில் காரை திருப்பியபோது, அங்கிருந்த பள்ளத்தில் கார் சிக்கியது. அருண்குமார் எவ்வளவு முயற்சித்தும், பள்ளத்திலிருந்து காரை எடுக்க முடியவில்லை. பின், கார் கதவை திறக்காமல், ஜன்னல் வழியே வெளியேறினார். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், இழுவை வாகனம் உதவியுடன் காரை மீட்டனர். ஓட்டுநர் அருண்குமார் கூறுகையில், ''அணுகு சாலை முழுதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியவில்லை,'' என்றார்.