/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் கன மழையில் 2,875 ஏக்கர் விவசாய நிலம்...பாதிப்பு:நிவாரணம் கேட்டு அரசுக்கு வேளாண் துறை பரிந்துரை
/
செங்கையில் கன மழையில் 2,875 ஏக்கர் விவசாய நிலம்...பாதிப்பு:நிவாரணம் கேட்டு அரசுக்கு வேளாண் துறை பரிந்துரை
செங்கையில் கன மழையில் 2,875 ஏக்கர் விவசாய நிலம்...பாதிப்பு:நிவாரணம் கேட்டு அரசுக்கு வேளாண் துறை பரிந்துரை
செங்கையில் கன மழையில் 2,875 ஏக்கர் விவசாய நிலம்...பாதிப்பு:நிவாரணம் கேட்டு அரசுக்கு வேளாண் துறை பரிந்துரை
ADDED : ஜன 05, 2025 01:34 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வட கிழக்கு பருவமழையில் 1,000 ஏக்கரும், பெஞ்சல் புயல் மற்றும் கன மழையில் 1,875 ஏக்கரும், என, 2,875 ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு, கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயம் மேற்கோள்ளப்படுகிறது. மாவட்டத்தில், 1.67 லட்சாம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்நிலங்களில், கிணறு, ஆழ்துளை கிணற்று நீர், மற்றும் ஏரிகள் வாயிலாக சம்பா பருவம், நவரை பருவம், சொர்ணவாரி பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
மதுராந்தகம் , செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், அதிகமாக விவசாயம் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
மாற்ற தாலுகாக்களில் குறைவாக, விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில், சம்பா பருவம், நவரை பருவங்களில், விவசாய நிலங்களில் நெல் சாகுபடி, பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்தனர்.
கடந்த நவம்பர் மாதம், பெஞ்சல் புயல் ஏற்பட்டபோது, கன மழை பெய்ததில், எட்டு வட்டாரங்களில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது.
விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்ட விவரங்கள் கணக்கெடுக்கும் பணியில், வேளாண்மை துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில், 1,870 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதை கண்டறிந்தனர்.
வடகிழக்கு பருவ மழையில், மாவட்டத்தில், விவசாய நிலங்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது. இதை வேளாண் துறையினர் கணக்கெடுப்பு பணி செய்ததில், 1,000 ஏக்கர் பதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்தனர்.
பெஞ்சல் புயலில் 1,875 ஏக்கர், வடகிழக்கு பருவ மழையில் 1,000 ஏக்கர் என மொத்தம் 2,875 ஏக்கர் விவசாயி நிலங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டதாக, வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க, கலெக்டர் அருண்ராஜ் பரிந்துரைபடி வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி, அரசுக்கு கருத்து அனுப்பி வைத்தார். விவசாயிகளுக்கு, நிவாரணத்தொகை உடனடியாக வழங்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:
கன மழையில், 2, 875 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் நீரில் முழ்கி சேதமடைந்தது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம் உள்ளோம். நிதி கிடைத்தவுடன், விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.