/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு தேவை
/
சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு தேவை
சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு தேவை
சூணாம்பேடு சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு தேவை
ADDED : ஜூலை 17, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூணாம்பேடு பஜார் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, பஜார் பகுதிக்குச் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது.
இப்பகுதியை, தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் கும்மிருட்டாக உள்ளது.
இதனால், வளைவுப் பகுதியை கடந்து செல்ல, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சூணாம்பேடு சாலை சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.வேல், சித்தாமூர்.