/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டம் கேளிக்கைகளுக்கு விடுதிகள் தயார்
/
புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டம் கேளிக்கைகளுக்கு விடுதிகள் தயார்
புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டம் கேளிக்கைகளுக்கு விடுதிகள் தயார்
புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டம் கேளிக்கைகளுக்கு விடுதிகள் தயார்
ADDED : டிச 23, 2024 11:43 PM
மாமல்லபுரம், ஆங்கில புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்தை, கேளிக்கைகளுடன் கொண்டாட, விடுதிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
சென்னை - புதுச்சேரி கடலோர சாலையில், மாமல்லபுரம், முட்டுக்காடு, கோவளம், வடநெம்மேலி, முகையூர் உள்ளிட்ட பகுதிகளில், கடற்கரை சொகுசு விடுதிகள் இயங்குகின்றன.
மாமல்லபுரத்தில், அதிக அளவில்,'ரெஸ்டாரென்ட்'கள் உள்ளன. பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள நாவலுார் உள்ளிட்ட பகுதிகளிலும், அதிக விடுதிகள் இயங்குகின்றன.
இவற்றில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். தற்போதும் கிறிஸ்துமஸ் கொண்டாடவும், புத்தாண்டை வரவேற்கவும், விடுதிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
விளக்குகள் பிரகாசிக்கும் பரந்த புல்வெளி பகுதியில் சைவ, அசைவ உணவுகள், மது விருந்து, இசை, நடனம் என, கேளிக்கை கொண்டாட்டத்திற்கு தயார்படுத்தி வருகின்றன.
குடும்பம், குழுவினர், தனிநபர், ஜோடி ஆகியோருக்கென, வெவ்வேறு கட்டணம் அறிவித்து, முன்பதிவிற்காக விருந்தினரை வரவேற்கின்றன. அதற்கேற்றபடி முன்பதிவும் அதிகரித்து வருவதால், விடுதி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.