/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் தேங்கிய மழை நீர் உடனடி அகற்றம்
/
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் தேங்கிய மழை நீர் உடனடி அகற்றம்
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் தேங்கிய மழை நீர் உடனடி அகற்றம்
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் தேங்கிய மழை நீர் உடனடி அகற்றம்
ADDED : அக் 15, 2024 11:18 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், உதயசூரியன் நகர், மீனாட்சி நகர், கே.கே. நகர், ஜெகதீஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், பருவமழை காலங்களில் பாதிப்புகள் அதிகமாக காணப்படும்.
குறிப்பாக, இப்பகுதியில் மழைநீர் தேங்கி, அங்கு வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகும். அதனை கருத்தில் கொண்டு, நகராட்சி சார்பில், கமிஷனர் ராணி, தலைவர் கார்த்திக், பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில், மழை பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மகாலட்சுமி நகர் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. அப்பகுதியில், மழைநீர் வடிகால்வாயுடன் மின் மோட்டார் இணைத்து, தேங்கிய மழை நீரை அகற்றினர். அதேபோல், கே.கே., நகர் பகுதியில் மழை நீர் சீராக செல்ல வழியின்றி, கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.
அதை, சுகாதார அலுவலர் தலைமையில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் சீரமைத்தனர். மேலும், மகாலட்சுமி நகர் பகுதியில், மழைநீர் கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து அடைப்பு ஏற்பட்டிருந்தது. அதனையும், நகராட்சியின் பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றி சீரமைத்தனர்.