ADDED : டிச 31, 2024 01:04 AM
மறைமலைநகர், டிச. 31--
செங்கல்பட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், புதுமைப்பெண் திட்டம் விரிவாக்க விழா, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்றார்.
இத்திட்டத்தின் வாயிலாக செங்கல்பட்டு மாவட்டத்தில், 144 கல்லுாரிகளைச் சேர்ந்த 10,383 மாணவியர் புதுமைப்பெண் திட்டத்திலும், 126 கல்லுாரிகளைச் சேர்ந்த 9,228 மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்திலும், 88 கல்லுாரிகளைச் சேர்ந்த 654 மாணவியர் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்திலும் பயன்பெற உள்ளனர். மொத்தமாக, 20,265 மாணவ -- மாணவியர் பயன்பெற உள்ளனர்.
இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.