/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
/
எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
ADDED : பிப் 20, 2024 12:00 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை - -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.
ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள அந்த சோதனைச்சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை கண்காணிப்பதற்காக, வாகனங்கள் கடக்கும் வழி தடங்களில், நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அதன் காட்சிகளை பதிவு செய்வது மட்டுமின்றி, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் மொபைல் போனில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, எல்லையோர சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தவே கேமராக்கள் பொருத்தப்பட்டதாக, ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தெரிவித்தார்.

