/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றாத அவலம்
/
நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றாத அவலம்
நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றாத அவலம்
நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றாத அவலம்
ADDED : நவ 20, 2024 01:21 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை 25 கி.மீ., துாரம் நீளமுடைய மாநில நெடுஞ்சாலை. இதில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையின் நடுவே, திருக்கச்சூர் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின் விளக்கு, கடந்த ஜூலை மாதம் இரவு பெய்த மழை மற்றும் பலத்த காற்றின் போது முறிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இது குறித்து வாகன கூறியதாவது:
திருக்கச்சூர் பகுதியில் கம்பம் முறிந்து விழுந்து நான்கு மாதங்களை கடந்த நிலையில், இதுவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தவில்லை.
இதனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இருள் சூழ்ந்துள்ளதால், சாலை நடுவே உள்ள பள்ளம் தெரியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
எனவே, முறிந்து விழுந்த பழைய கம்பத்தை அகற்றி விட்டு, புதிதாக மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.