/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் காட்டூர் விவசாயிகள் அச்சம்
/
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் காட்டூர் விவசாயிகள் அச்சம்
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் காட்டூர் விவசாயிகள் அச்சம்
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் காட்டூர் விவசாயிகள் அச்சம்
ADDED : செப் 20, 2024 12:11 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி நின்னைகாட்டூர் கிராமத்தில், காட்டூர் -- கிழக்கு பொத்தேரி சாலையின் இருபுறமும், விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு, நெல் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இந்த பகுதியில் உள்ள வயல்வெளியில், காட்டாங்கொளத்துார் மின்வாரிய அலுவலகம் சார்பில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மின் கம்பிகள், பல இடங்களில் மிகவும் தாழ்வாக செல்வதால், வயலுக்கு செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக, மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. டிராக்டர் வாயிலாக உழவுப் பணிகள் மேற்கொள்ளும் போது, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் தடை ஏற்படுகிறது.
அதேபோல், அறுவடை காலத்திலும், இயந்திரங்கள் வாயிலாக அறுவடை பணிகள் மேற்கொள்ளும் போது, தனியாக ஆட்கள் வைத்து, மரக்கிளைகள் வாயிலாக மின் கம்பிகளை உயர்த்தி பிடித்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
மேலும், அறுவடை முடிந்த நிலத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், மின் கம்பிகளில் சிக்கி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், இந்த மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.