/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் தேக்குவதால் கூடுவாஞ்சேரியில் அவதி
/
மழைநீர் தேக்குவதால் கூடுவாஞ்சேரியில் அவதி
ADDED : ஜன 02, 2025 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி சிக்னல் அடுத்துள்ள சீனிவாசபுரம் பகுதி ஜி.எஸ்.டி., சாலையில், அணுகு சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த சாலை அருகில் வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளன.
இங்கு பல்வேறு பணிகளுக்காக செல்வோர், மழைநீர் தேங்குவதால் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் சில நேரம் தடுமாறி விழுகின்றனர்.
எனவே, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, 'பிளீச்சிங் பவுடர்' தெளித்து பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வர, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

