/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் தாசில்தார் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
/
செய்யூர் தாசில்தார் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
செய்யூர் தாசில்தார் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
செய்யூர் தாசில்தார் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
ADDED : பிப் 13, 2025 08:49 PM
செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில், தாசில்தார் அலுவலகம் செயல்படுகிறது.
குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், நில அளவைக்கு விண்ணப்பித்தல் என, பல்வேறு பணிகளுக்காக, தினமும் பொதுமக்கள் அதிகமானோர் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாக தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி இல்லை.
இதனால், இந்த அலுவலகத்திற்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமப்படுகின்றனர்.
தற்போது வெயிலும் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீரின்றி கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.