/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் தாசில்தார் ஆபீசில் இருக்கை வசதியின்றி அவதி
/
செய்யூர் தாசில்தார் ஆபீசில் இருக்கை வசதியின்றி அவதி
செய்யூர் தாசில்தார் ஆபீசில் இருக்கை வசதியின்றி அவதி
செய்யூர் தாசில்தார் ஆபீசில் இருக்கை வசதியின்றி அவதி
ADDED : மார் 30, 2025 12:37 AM

செய்யூர்:செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள காத்திருப்பு பகுதியில் மின்விசிறி இல்லாமல், வெயில் நேரத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
செய்யூர் பஜார் வீதியில், தாசில்தார் அலுவலகம் உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை விண்ணப்பித்தல், சொத்து மதிப்புச் சான்று, நில அளவைக்கு பதிவு செய்தல், பட்டா பெயர் மாற்றம் என, பல்வேறு வேலைக்காக வந்து செல்கின்றனர்.
அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, காத்திருப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டு, 12 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு மின்விசிறி வசதி இல்லாததால், வெயில் நேரத்தில் ஏற்படும் வெப்பத்தால், காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள், மக்கள் நலன் கருதி, காத்திருப்பு பகுதியில் மின்விசிறி வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.