/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெள்ளிமேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
/
தெள்ளிமேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
தெள்ளிமேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
தெள்ளிமேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ADDED : நவ 14, 2025 01:29 AM

சிங்கபெருமாள்கோவில்: சிங்கபெருமாள் கோவில் அருகில், ஆக்கிரமிப்பில் இருந்த சுடுகாடு நிலத்தை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கிடாபுரம் ஊராட்சி தெள்ளிமேடு கிராமத்தில், சர்வே எண் 267/2ல் சுடுகாடு இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிலர், இந்த சுடுகாடு நிலத்தை பலருக்கு விற்பனை செய்து உள்ளனர்.
இங்கு 39 சென்ட் நிலம் வாங்கிய சந்திரன், 62, என்பவர், வீடு கட்டி 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், 2017ம் ஆண்டு, சுடுகாடு நிலத்தை மீட்டுத் தர வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெள்ளிமேடு கிராம மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து நீதிமன்றம், சுடுகாடு நிலத்தை மீட்க, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இதில் தாமதம் ஏற்பட்டதால், தெள்ளிமேடு கிராம மக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், செங்கல்பட்டு கலெக்டர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று, செங்கல்பட்டு தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வருவாய் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.
அப்போது சந்திரன் குடும்பத்தார், ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சந்திரனின் மகன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
இதையடுத்து பேச்சு நடத்தி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று இடம் வழங்குவதாக கூறப்பட்டது. அதன் பின், சந்திரன் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பை எடுக்க சம்மதம் தெரிவித்தனர். பின், அந்த நிலத்தில் இருந்து கட்டடங்களை 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக இடித்து அதிகாரிகள் நிலத்தை மீட்டனர்.

