/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் நடைமுறை துவக்கம்
/
செங்கை டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் நடைமுறை துவக்கம்
ADDED : நவ 14, 2024 09:44 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ், 70 டாஸ்மாக் கடைகளும், காஞ்சிபுரம் வடக்கு நிர்வாகத்தின் கீழ் 63 கடைகளும் என, மொத்தம் 133 கடைகள் உள்ளன.
டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, கடந்த நான்கு ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்தது.
மது பானங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் போது, ஊழியர்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இச்சம்பவங்களை தடுக்க, டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்வோருக்கு, ஆன்லைன் பில் வழங்கவும், ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசு முடிவெடுத்தது.
அதன்பின், டாஸ்மாக் கடைகளில், இன்று முதல், வாங்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது மற்றும் கீயூஆர் கோடு வாயிலாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்பணியில், மூன்று முதுநிலை பொறியாளர்கள், 13 ஒருங்கிணைப்பு பொறியாளர்கள், 130 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.