/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனநலம் பாதித்த முதியவரை கொன்ற வக்கீல்கள் கைது
/
மனநலம் பாதித்த முதியவரை கொன்ற வக்கீல்கள் கைது
ADDED : பிப் 23, 2025 10:35 PM
தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சுற்றி திரிந்த முதியவர், அப்பகுதியில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற தாம்பரம் போலீசார், அந்த முதியவரை விசாரித்தனர். அதில், அயனாவரத்தை சேர்ந்த ரங்கநாதன், 59, என்பவதும், மனநலம் பாதித்து, அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி, தாம்பரத்தில் சுற்றி திரிந்ததும் தெரிந்தது.
அங்கு காரில் வந்த இளைஞர்கள் இருவர், காரை சாலையோரம் நிறுத்தி, அங்குள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றனர். அப்போது அந்த முதியவர், காரை அடித்து ரகளையில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும், முதியவரை கையால் தாக்கி கீழே தள்ளினர்.
தலையில் காயமடைந்த முதியவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், 33, சட்டக்கல்லுாரி மாணவர் வினோத், 28 ஆகிய இருவரும் முதியவரை தாக்கியது தெரிய வந்தது. இவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

