/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் பூங்காவில் சிங்கம் 'புவனா' உயிரிழப்பு
/
வண்டலுார் பூங்காவில் சிங்கம் 'புவனா' உயிரிழப்பு
ADDED : நவ 21, 2025 02:02 AM
தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்கா, 'லயன் சபாரி'யில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற பெண் சிங்கம், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில், 147 ஏக்கர் பரப்பளவு அடர்ந்த காட்டுப் பகுதியில் சிங்கங்களை அருகே சென்று கண்டு ரசிக்கும், 'லயன் சபாரி' பயன்பாட்டில் உள்ளது. இதை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதியுடைய வாகனங்களில், லயன் சபாரி இருப்பிடத்திற்கு சென்று, அருகே வரும் சிங்கங்களை பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். அங்கு, ஆறு சிங்கங்கள் உள்ளன.
இதில், இரண்டு சிங்கங்கள், பார்வையாளர்கள் கண்டு ரசிக்க காட்டுப்பகுதியில் விடப்படும். மற்ற நான்கு, கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், இங்கு பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயதுடைய பெண் சிங்கம், உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று இறந்தது. பூங்கா நிர்வாகம், சிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தது.

