/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு கூட்டுறவு வார விழாவில் 1,968 பேருக்கு ரூ.16 கோடி கடனுதவி
/
செங்கல்பட்டு கூட்டுறவு வார விழாவில் 1,968 பேருக்கு ரூ.16 கோடி கடனுதவி
செங்கல்பட்டு கூட்டுறவு வார விழாவில் 1,968 பேருக்கு ரூ.16 கோடி கடனுதவி
செங்கல்பட்டு கூட்டுறவு வார விழாவில் 1,968 பேருக்கு ரூ.16 கோடி கடனுதவி
ADDED : நவ 21, 2025 03:11 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு, 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, கடந்த 14ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது.
இதைத்தொடர்ந்து, கூட்டுறவு வார விழா, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்த குமார் வரவேற்றார்.
இவ்விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 1,968 பயனாளிகளுக்கு, 16.14 கோடி ரூபாய் கடன் உதவி, பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினா ர்.
அப்போது, அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நியாய விலைக்க டைகளில் மாவட்ட ஆள் சேர்ப்பு மையம் மூலம், தமிழகத்தில் உதவியாளர், விற்பனையாளர்கள், கட்டுநர்கள் என மொத்தம் , 12,485 பேர் உள்ளனர். இவர்களில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 382 பேர் பணிபுரிந்து வருகின்றனர் .
தமிழகத்தில், கூட்டுறவுத்துறையில் முதல்வர் மருந்தகம் 1,000 திறக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஊரப்பாக்கம் பகுதியில், 40,000க்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில், முதல்வர் மருந்தகம் அமைக்க தேவையான அனைத்து வசதிகளும் செ ய்து தரப்படும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
இந் த விழாவில், செங்கல்பட்டு தி.மு.க., - எம், எல்.ஏ., வரலட்சுமி, திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி, திருக்கழுக்குன்றம் பேரூ ராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பலர் ப ங்கேற்றனர்.
செ ங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் உமாசங்கரி நன்றி கூறினார்.

