/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமதியின்றி ஜல்லி ஏற்றிவந்த லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது
/
அனுமதியின்றி ஜல்லி ஏற்றிவந்த லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது
அனுமதியின்றி ஜல்லி ஏற்றிவந்த லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது
அனுமதியின்றி ஜல்லி ஏற்றிவந்த லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது
ADDED : ஏப் 10, 2025 08:10 PM
பம்மல்:சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநீர்மலை அணுகு சாலையில், செங்கல்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவியாளர் பாலசுப்பிரமணியன், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை மடக்கி சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி, பம்மல் காமராஜபுரத்தில் உள்ள கிரஷருக்கு ஜல்லிக்கற்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை கைப்பற்றி, ஓட்டுநரான விழுப்புரம், திருக்கோவிலுாரை சேர்ந்த மணிகண்டன், 32, என்பவரை, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, உரிய அனுமதியின்றி ஜல்லிக்கற்களை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்தனர்.
பம்மல், காமராஜபுரத்தில் கிரஷர்கள் இயங்குகின்றன. இந்த கிரஷர்களுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து, உரிய அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி வரப்படுகின்றன.
அதேபோல், கிரஷர்களும் உரிய அனுமதியின்றி இயங்குகின்றன. இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.