/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உடல்நிலை பாதிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் உயிர் இழப்பு
/
உடல்நிலை பாதிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் உயிர் இழப்பு
உடல்நிலை பாதிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் உயிர் இழப்பு
உடல்நிலை பாதிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் உயிர் இழப்பு
ADDED : நவ 28, 2024 08:01 PM
மதுராந்தகம்:விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 31. இவர், சென்னையில் உள்ள ஆச்சி மசாலா கம்பெனியில், வேன் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் இருந்து கேரளாவிற்கு லோடு ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு, பின் சென்னை நோக்கி திரும்பி வந்துள்ளார்.
அப்போது, மதுராந்தகம் அடுத்த படாளம் லாரி பார்க்கிங் அருகே, வண்டியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அப்பகுதியில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். அப்பகுதிக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை சோதனை செய்து பார்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.