/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் கவுன்சிலர் துாக்கிட்டு தற்கொலை
/
மதுராந்தகம் கவுன்சிலர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 18, 2025 12:37 AM

சித்தாமூர்; சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா, 45. மதுராந்தகம் ஒன்றியக் குழுவின், 20வது வார்டு, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன், தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, பிரியாவின் கணவர் சக்கரபாணி அளித்த புகாரின்படி, சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார், பிரியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.