/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாட்டம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
/
பாலாட்டம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 03, 2025 11:55 PM

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், பாலாட்டம்மன் கோவில் உள்ளது.
சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை புனரமைக்க, ஊராட்சி முடிவு செய்தது.
இதையடுத்து அம்மன் கோபுரம், சுற்றுப் பிரகாரம், மண்டபம் அமைக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.
இதற்கான கும்பாபிஷேக விழா, கடந்த 30ம் தேதி முதல், விநாயகர் வழிபாடுடன் துவங்கி, பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன.
நேற்று காலை, 7:00 மணிக்கு, விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து மஹா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை என, பல்வேறு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.