/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பாக்கத்தில் அழுகிய நிலையில் காரில் ஆண் சடலம் மீட்பு
/
புதுப்பாக்கத்தில் அழுகிய நிலையில் காரில் ஆண் சடலம் மீட்பு
புதுப்பாக்கத்தில் அழுகிய நிலையில் காரில் ஆண் சடலம் மீட்பு
புதுப்பாக்கத்தில் அழுகிய நிலையில் காரில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஏப் 10, 2025 08:08 PM
திருப்போரூர்:புதுப்பாக்கத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில், அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை இடையே உள்ள புதுப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, 'மாருதி சுசுகி பலேனோ' கார் ஒன்று, கடந்த இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஒருவர் உள்ளே மயங்கிய நிலையில் இருப்பதாகவும், அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், நேற்று முன்தினம் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, கார் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கார் ஓட்டுநர், அவரது சீட்டில் சாய்ந்தபடி, இறந்த நிலையில் இருந்துள்ளார். பின், கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து, அழுகிய நிலையிலிருந்த உடலை மீட்டனர்.
காரில் மது குடித்த காலிபாட்டிலும் இருந்துள்ளது.
சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின், காரில் இருந்த மொபைல் போன், கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், கேளம்பாக்கம் அடுத்த பனங்காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 40, என்பதும், கட்டுமான தொழில் செய்து வந்ததும் தெரிந்தது.
மேலும், அவர் கேளம்பாக்கத்தில் மது வாங்கி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையில் புறப்பட்டிருக்கலாம்.
பின், நிதானம் இல்லாமல் காரை புதுப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி விட்டு, கார் கதவுகளை மூடிக் கொண்டு 'ஏசி'யை போட்டு காரிலேயே துாங்கி இருக்கலாம்.
அப்போது மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

