/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மல்லை போக்குவரத்து நெரிசல் இன்றைய போக்குவரத்தில் மாற்றம்
/
மல்லை போக்குவரத்து நெரிசல் இன்றைய போக்குவரத்தில் மாற்றம்
மல்லை போக்குவரத்து நெரிசல் இன்றைய போக்குவரத்தில் மாற்றம்
மல்லை போக்குவரத்து நெரிசல் இன்றைய போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஜன 15, 2025 11:58 PM
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் காணும் பொங்கல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அரசு பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றை, நகருக்கு வெளியே நிறுத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர், பொங்கல் விடுமுறை பொழுதுபோக்கிற்காக, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை காண படையெடுக்கின்றனர். பெரும்பாலானோர் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதுமட்டுமின்றி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் வழிபடும் கர்நாடக பக்தர்கள், மாமல்லபுரம் கடலிலும் நீராட கருதி, இங்கு தினசரி ஏராளமான பேருந்துகளில் வருகின்றனர்.
இங்குள்ள குறுகிய சாலைகளில், சுற்றுலா வாகனங்கள் கடக்கஇயலாமல், அவற்றை நிறுத்த இடமும் இல்லாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காணும் பொங்கல் நாளான இன்று, பல்லாயிரம் வாகனங்களால் போக்குவரத்து முடங்கும் என கருதி, வாகனங்களை வெளியில் நிறுத்த, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறியதாவது:
மாமல்லபுரம் வரும் அரசு பேருந்துகள், மாநகர் பேருந்துகள், புறவழி சந்திப்பு பகுதியில் நின்று புறப்படும். அவற்றில் வரும் பயணியர், பேருந்து நிலையம் செல்ல, சிற்றுந்து இயக்கப்படும். சுற்றுலா பேருந்து உள்ளிட்ட வாகனங்களும், புறவழி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நிறுத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கூறினார்.

