/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் ம.தி.மு.க.,வில் இருந்து விலகல்
/
மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் ம.தி.மு.க.,வில் இருந்து விலகல்
மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் ம.தி.மு.க.,வில் இருந்து விலகல்
மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் ம.தி.மு.க.,வில் இருந்து விலகல்
ADDED : ஜூலை 30, 2025 11:40 PM

திருப்போரூர்:ம.தி.மு.க.,வில் இருந்து விலகிய, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், தங்களின் கார்களில் இருந்த கட்சி கொடியை கழற்றி வீசி, எதிர்ப்பு தெரிவித்தனர்.
ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா, கட்சிக்கு எதிராக துரோகம் செய்து வருவதாக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, 'டிவி' பேட்டி ஒன்றில் குற்றம் சுமத்தினார். மகனுக்காக, வைகோ தன் மீது துரோகி பட்டம் சுமத்தி வருவதாக, மல்லை சத்யாவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று, மல்லை சத்யாவுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்போரூர் ரவுண்டானா அருகே, ம.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் கங்காதரன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அப்போது வைகோ மற்றும் துரை வைகோவுக்கு எதிராக சாலையில் நின்று கோஷம் எழுப்பினர்.
ம.தி.மு.க., கொடி பொருத்தப்பட்டிருந்த தங்களின் கார்களை வரிசையாக நிறுத்தினர்.
அதன் பின், கார்களில் இருந்த ம.தி.மு.க., கொடிகளை கழற்றி வீசி எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதுமட்டுமின்றி, தங்களின் உறுப்பினர் அட்டைகளையும் வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.