/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்பங்களை இன்று இலவசமாக காணலாம்
/
மாமல்லை சிற்பங்களை இன்று இலவசமாக காணலாம்
ADDED : நவ 19, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்,: நாடு முழுதும் ஏப்., 18ல் சர்வதேச பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, உலக பாரம்பரிய வாரமாக, நவ., 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
பல்லவர் கால நினைவுச் சின்னங்கள் உள்ள மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில், இவ்வாரத்தை கடைப்பிடித்து, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வார துவக்க நாளான இன்று, மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றுலா பயணியர் கட்டணமின்றி இலவசமாக காணலாம் என, தொல்லியல் துறையினர் அறிவித்துள்ளனர்.