/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனுநீதிநாள் முகாம் 60 பேருக்கு நலத்திட்ட உதவி
/
மனுநீதிநாள் முகாம் 60 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜன 30, 2025 02:08 AM
செங்கல்பட்டு:வெள்ளப்புத்துார் கிராமத்தில் நடந்த மனு நீதிநாள் முகாமில், 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம் அடுத்த வெள்ளப்புத்துார் ஊராட்சியில், மனுநீதிநாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்.
மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி நடந்தது. இதில், ஊராட்சியைச் சேர்ந்த கிராமவாசிகள் பங்கேற்றனர்.