/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் மாரத்தான் ஓட்டம்
/
திருப்போரூரில் மாரத்தான் ஓட்டம்
ADDED : ஆக 15, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அருகே தன்னார்வ அமைப்புகள் சார்பில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாரத்தான் ஓட்டம் ,5 மற்றும் 10 கி.மீ., துாரம் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. மாரத்தான் ஓட்டம், திருப்போரூர் அடுத்த காலவாக்கம் ஆறுவழிச்சாலை ரவுண்டானாவில் துவங்கி, வெங்கலேரி ரவுண்டானா வரை சென்று நிறைவடைந்தது.

