sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்

/

மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்

மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்

மாசிமக தெப்பல் விழா கோவில்களில் கோலாகலம்


ADDED : பிப் 25, 2024 01:35 AM

Google News

ADDED : பிப் 25, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில். மாசி மக பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று, 10ம் நாள் உற்சவமாக தெப்பல் திருவிழா நடந்தது. இதில், இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் கந்தபெருமான், வள்ளி, தெய்வானையருடன் எழுந்தருளி சரவண பொய்கையில் ஐந்து முறை வலம் வந்தார்.

இதில், ஏராளமான பக்தர்கள் படிக்கட்டுகளில் கற்பூரம் தீபங்களை வெற்றிலையில் ஏற்றி வரவேற்றனர்.

முன்னதாக, பகல் 2:30 மணிக்கு, கந்தபெருமான் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 3:00 மணியளவில், கந்தபெருமான் சரவண பொய்கையில் எழுந்தருளி தீர்த்தவாரி ஆடினார். பின், காவடி மண்டபத்தில் கந்தபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதேபோல், கொளத்துாரில் உள்ள கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலிலும் மாசிமக தெப்பல் விழா நேற்று நடந்தது.

இரவு 7:00 மணியளவில் கல்யாண ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் தெப்பல் குளத்தில் எழுந்தருளி ஒன்பது முறை வலம் வந்தார்.






      Dinamalar
      Follow us