/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் மின்கோட்டத்தில் இன்று மெகா மின் தடை
/
மறைமலை நகர் மின்கோட்டத்தில் இன்று மெகா மின் தடை
ADDED : ஜூலை 23, 2025 01:49 AM
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மூன்று துணை மின் நிலையங்களில் இன்று, மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் தைலாவரம், கண்ணகப்பட்டு, படப்பை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மறைமலை நகர் மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தைலாவரம் 33/11 கே.வி., துணை மின்நிலையத்தின் வள்ளலார் நகர் 11 கே.வி., படப்பை 110/11 கே.வி., துணை மின்நிலையத்தின் ஆதனுார் 11 கே.வி., மற்றும் கண்ணகப்பட்டு 110/11 கே.வி., துணை மின்நிலையத்தின் கண்ணகப்பட்டு 11 கே.வி., ஆகிய மூன்று மின்னுாட்டிகளில், இன்று காலை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், திருப்போரூர் ஒரு பகுதி, கண்ணகப்பட்டு மற்றும் சுற்றுப் பகுதி, ஆதனுார் சாலை, வீராத்தம்மன் கோவில், எம்.ஜி.நகர் 1வது முதல் 10வது தெரு, அம்பேத்கர் நகர், ஆதனுார் காலனி ஆகிய பகுதி.
தவிர வத்சலா கார்டன், அண்ணா நகர், சன்சிட்டி, வரதம்மா நகர், ராம் நகர், விவேகானந்தா நகர், செல்வராஜ் நகர் மற்றும் சுற்றுப் பகுதி.
வள்ளலார் நகர், குத்தனுார், திருத்தவேலி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மாணிக்கபுரம், மாடம்பாக்கம், மேரின் சாலை, காவனுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.