ADDED : ஏப் 13, 2025 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பால்குட விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்களுடன், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஓ.எம்.ஆர்., சாலை வடக்கு, கிழக்கு மாடவீதி வழியாக கந்தசுவாமி கோவிலுக்கு வந்தடைந்தனர். பின், உற்சவர் கந்தபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
மாடவீதிகளில் அன்னதானம் வழங்குதல், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு 12:00 மணிக்கு பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில் பஜனைப் பாடல்களுடன் படி பூஜை வெகு விமரிசையாக நடந்தது.

