/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 மீ., அகலம் குறைவாக வடிகால்வாய் ஒப்பந்ததாரருக்கு எம்.எல்.ஏ., கண்டிப்பு
/
5 மீ., அகலம் குறைவாக வடிகால்வாய் ஒப்பந்ததாரருக்கு எம்.எல்.ஏ., கண்டிப்பு
5 மீ., அகலம் குறைவாக வடிகால்வாய் ஒப்பந்ததாரருக்கு எம்.எல்.ஏ., கண்டிப்பு
5 மீ., அகலம் குறைவாக வடிகால்வாய் ஒப்பந்ததாரருக்கு எம்.எல்.ஏ., கண்டிப்பு
ADDED : மே 05, 2025 01:38 AM

மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலம், வார்டு 187, 188க்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மூவரசம்பேட்டை, கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லாவரம் மற்றும் மடிப்பாக்கத்தின் இரு வார்டுகளில் உள்ள வடிகால்வாய் வழியாக வரும் மழைநீர், மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகரில் அமைந்துள்ள இரு கால்வாய்களின் முகப்பு பகுதியில் இணைக்கப்பட்டு, அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கலந்து, பக்கிங்காம் கால்வாய் வாயிலாக கடலில் கலக்கிறது.
மயிலை பாலாஜி நகர் பகுதி 2, 4ல் அமைந்துள்ள முகப்பு வடிகால்வாய், 230 மீ., நீளமும், 15 மீ., அகலமும் உடையது. இவை, திறந்த நிலையிலும், இருபுறமும் சுவர் இன்றியும் உள்ளன.
இதனால், குப்பை, கழிவால் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர் முறையாக வெளியேறாமல், வீடுகளில் புகுந்து பகுதிவாசிகள் சிரமப்பட்டனர்.
இதை கருத்தில் கொண்டு, கால்வாய்களின் இருபுறமும் தரைமட்டத்திலிருந்து மூன்றடி உயரம் தடுப்பு சுவரும், சிமென்ட் தரையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரர், 15 மீ., அகலத்தில் சுவர் அமைக்காமல், 10 மீ., அகலம் மட்டுமே சுவர் அமைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், குறிப்பிட்ட பகுதியை பார்வையிட்டு, அகலம் குறைவாக வடிகால்வாய் அமைப்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் விசாரித்தார்.
அதற்கு, கால்வாய்களின் ஓரத்தில் இரு கோவில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு, அதிகாரிகள், கவுன்சிலர், சேர்மன் என, யாரிடமும் ஒப்புதல் பெறாமல், தன்னிச்சையாக அகலம் குறைவாக வடிகால்வாய் கட்ட முடிவெடுத்தது குறித்து, ஒப்பந்ததாரரை எம்.எல்.ஏ., கண்டித்தார்.
அது மட்டுமின்றி, அரைகுறையாக நடந்து வரும் பணியை நிறுத்தும்படியும், குறிப்பிட்ட அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று, சரியான அளவில் வடிகால்வாய் அமைக்கும் பணியை துவங்குமாறும், ஒப்பந்ததாரருக்கு எம்.எல்.ஏ., அறிவுரை கூறினார்.